40 வருட செகரெட்டரி கொரோனாவால் மரணம் : ஹேமமாலினி உருக்கம்

தினமலர்  தினமலர்
40 வருட செகரெட்டரி கொரோனாவால் மரணம் : ஹேமமாலினி உருக்கம்

ஹிந்தித் திரையுலகின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை ஹேமமாலினி. தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ஹேமமாலினி 1970ல் தர்மேந்திரா கதாநாயகனாக நடித்த 'தும் ஹசீன் மெயின் ஜவான்' என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

1980ம் ஆண்டு தர்மேந்திராவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போதும் வருடத்திற்கு ஒரு படத்திலாவது நடித்துவிடுவார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் ஹேமமாலினி நள்ளிரவில் சோகமான செய்தி ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

“கனத்த இதயத்துடன் இதை பதிவிடுகிறேன். என்னுடன் 40 வருடங்களாக இருந்த, ஈடுபாடுடைய, கடும் உழைப்பாளியான, ஓய்வறியாத எனது செகரெட்டரி மேத்தா ஜி அவர்களுக்கு விடை கொடுக்கிறேன். எனது குடும்பத்தில் ஒருவராகவே இருந்தவர். கொரோனா காரணமாக அவரை இழந்து விட்டோம். அவர் ஈடு செய்ய முடியாதவர், அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது,” என இரங்கல் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை