பிரபாஸ் படத்தில் விபீஷணன் வேடத்தில் சுதீப்

தினமலர்  தினமலர்
பிரபாஸ் படத்தில் விபீஷணன் வேடத்தில் சுதீப்

சலார், ஆதிபுருஷ், ராதே ஷியாம் என ஒரே நேரத்தில் மூன்று மெகா படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ். இதில் ஓம்ராவத் என்பவர் இயக்கி வரும் ஆதிபுருஷ் படம் தெலுங்கு, ஹிந்தியில் தயாராகிறது. பிரபாசுடன் பாலிவுட் நடிகர் சயூப் அலிகானும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் கீர்த்தி சனோன், சன்னி சிங் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது பிரபல கன்னட நடிகரான நான் ஈ சுதீப்பும், ஆதிபுருஷ் படத்தில் இணைந்துள்ளார். புராணக் கதையில் உருவாகி வரும் இப்படத்தில் சுதீப் விபீஷ்ணன் வேடத்தில் நடிக்கிறார். ஆதிபுருஷ் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஜூன் இறுதியில் இருந்து தொடங்குகிறது. அப்போது சுதீப்பும் கலந்து கொள்கிறார்.

மூலக்கதை