கொரோனாவின் கோலாட்டம்: 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி தனிதனியாக தொலைப்பேசியில் ஆலோசனை

தினகரன்  தினகரன்
கொரோனாவின் கோலாட்டம்: 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி தனிதனியாக தொலைப்பேசியில் ஆலோசனை

டெல்லி: கொரோனா நிலவரம் தொடர்பாக 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்றும் நாளையும் ஆலோசனை நடத்துகிறார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாநில முதல்வர்களுடன் தனிதனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்துகிறார். பஞ்சாப், பீகார், கர்நாடகா, உத்தரகாண்ட் ஆகிய மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசி வாயிலாக பேசினார். தடுப்பூசி பணிகளின் நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். அப்போது தங்கள் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாநிலங்களின் முதல்வர்கள் எடுத்துரைத்தனர். முன்னதாக நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இமாசல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர் ஆகியோரை தனித்தனியாக தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசியிருந்தார். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா 2-ம் அலை தீவிரமாக வீசி வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் தீவிரப்படுத்துமாறு பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். 

மூலக்கதை