இது உங்கள் இடம் : மாற்றம் ஏமாற்றம் ஆகக் கூடாது!

தினமலர்  தினமலர்
இது உங்கள் இடம் : மாற்றம் ஏமாற்றம் ஆகக் கூடாது!

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :

பா.ஸ்ரீராமதேசிகன், மதுராந்தகத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபை தேர்
தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, தி.மு.க., ஆட்சியில் அமர்ந்துள்ளது. கடந்த
ஐந்தாண்டுகளில் நடந்த சில கசப்பான சம்பவங்களை மனதில் நிறுத்தி, அதற்கு தக்க பதிலடி தர, ஆளுங்கட்சியாக இருந்த, அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, தி.மு.க.,வை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.இ.பி.எஸ்., தலைமையிலான, அ.தி.மு.க., ஆட்சியின் மீதும், அமைச்சர்கள் மீதும் எழுந்த அதிருப்தி காரணமாகத் தான், 1996 தேர்தலுக்கு பின், இவ்வளவு பெரும்பான்மை பலத்துடன், தி.மு.க., வெற்றி பெற்று இருக்கிறது. இது சரியில்லை என்றால், அதையும்; அது சரியில்லை என்றால், இதையும் என, அ.தி.மு.க., - தி.மு.க., என இரண்டையும் மாறி மாறி, ஆட்சியில் அமர வைக்கின்றனர், தமிழக மக்கள். இன்னும் எத்தனை நாள், இரு திராவிட கட்சிகளை மையமாக வைத்தே, தமிழக அரசியல் நடக்கும்? புதியவர், படித்தவர், நேர்மையானவர் எப்போது அரசியலுக்கு வருவர்? அவர்களுக்கு, மக்கள் எப்போது ஆதரவளிப்பர்? நடந்தது நடந்ததாக இருக்கட்டும். நடப்பது, நல்லதாக இருக்கட்டும்.தற்போது, முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ள ஸ்டாலின், தி.மு.க., அறிவித்த வாக்குறுதிகளை எவ்வித குறையுமின்றி நிறைவேற்ற வேண்டும். முதலில், இந்த கொரோனா சூழலை வெற்றிகரமாக ஒழித்து, சீக்கிரம் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்ப, வழி செய்ய வேண்டும். மக்கள் அளித்த மாற்றம், அவர்களுக்கு ஏமாற்றம் ஆகாமல் இருந்தால் நல்லது.

மூலக்கதை