அயன்மேன் பட பாணியில் பறக்கும் ஆடையை வடிவமைத்த பிரிட்டன் நிறுவனம்: அதனை பிரிட்டன் கடற்படையில் இணைக்கப்பட வாய்ப்பு

தினகரன்  தினகரன்
அயன்மேன் பட பாணியில் பறக்கும் ஆடையை வடிவமைத்த பிரிட்டன் நிறுவனம்: அதனை பிரிட்டன் கடற்படையில் இணைக்கப்பட வாய்ப்பு

லண்டன்: அயன்மேன் பட பாணியில் பறக்கும் ஆடையை பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது. அதன் ஒத்திகை முடிவடைந்திருக்கும் நிலையில் விரைவில் பிரிட்டன் கடற்படையில் அதனை இணைக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. Gravity Industries என்னும் நிறுவனம் உருவாக்கியுள்ள jet suit களை கொண்டு இங்கிலாந்து கடற்படை இந்த ஒத்திகையை நடத்தி முடித்துள்ளது. நடுக்கிடலில் பறந்து செல்லும் ராணுவ வீரர் போர் கப்பலை சென்றடைவது வரை ஒத்திகை நடத்தி  அந்த வீடியோ காட்சிகளை பிரிட்டன் கடற்படை இணையத்தில் பதிவேற்றியுள்ளது. ஒரு பெரிய ஷோல்டர் பாக் போன்ற இயந்திரத்தையும் அவரது இரு கைகளையும் உருளையாக ஒரு ஜோடி சிலிண்டர்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. புவியின் ஈர்ப்பு விசையை மீறி ராணுவ வீரர் பறக்கும் இந்த காட்சிகள்  இணையத்தில் வைரலாகி வருகிறது. 2017-ம் ஆண்டு தொடங்கிய இந்த பணி தற்போது ஒத்திகை என்ற கட்டத்தை அடைந்துள்ளது. விரைவில் இந்த jet suit பிரிட்டன் கடற்படையில் இணைக்கப்படும் என கூறப்படுகிறது. பறவையை கண்டு விமானம்படைத்த மனிதன் இன்று தானே பறக்கும் ஆடையை அவமதித்து விட்டான். கற்பனை என்றுமே அளவு கடந்தது, ஹாலிவுட்டில் கற்பனையில் உருவான அயன்மேனை தற்போது நிஜமாக்கும் முயற்சியில் கிட்டத்தட்ட வெற்றி முகத்தை அடைந்துள்ளனர் பிரிட்டன் தொழில்நுட்ப கலைஞர்கள்

மூலக்கதை