ரகானேவுக்கு தடுப்பூசி | மே 08, 2021

தினமலர்  தினமலர்
ரகானேவுக்கு தடுப்பூசி | மே 08, 2021

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ரகானே தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது.  அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடக்கின்றன.இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, துவக்க வீரர் ஷிகர் தவான் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தற்போது இந்திய டெஸ்ட் அணி கேப்டன் ரகானே 32, அவரது மனைவி ராதிகாவும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இதற்கான போட்டோவை ‘டுவிட்டரில்’ வெளியிட்ட ரகானே கூறுகையில்,‘‘கொரோனா முதற்கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்டோம். இதுபோல நீங்கள் தகுதியுடையவர் என்றால், முன்னதாக பதிவு செய்து உங்களுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்,’’ என்றார்.

மூலக்கதை