பங்குகளை விற்கும் ‘அமேசான்’ தலைவர்

தினமலர்  தினமலர்
பங்குகளை விற்கும் ‘அமேசான்’ தலைவர்

புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரும், ‘அமேசான்’ நிறுவன தலைவருமான ஜெப் பெசோஸ், 17 ஆயிரத்து, 750 கோடி ரூபாய் மதிப்பிலான, அமேசான் நிறுவன பங்குகளை விற்பனை செய்துள்ளார்.

இந்த வாரத்தின் துவக்கத்திலேயே அவர், 20 லட்சம் பங்குகளை விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்துஇருந்தார். முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வர்த்தக திட்டத்தின் கீழ், அவர் அமேசான் நிறுவனத்தின், 7.39 லட்சம் பங்குகளை விற்பனை செய்து உள்ளார்.இதன்பின், அமேசான் நிறுவனத்தின், 10 சதவீத பங்குகள் அவர் வசம் உள்ளது.

கடந்த ஆண்டில் ஜெப் பெசோஸ், 74 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டில், அமேசான் நிறுவனத்தின் பங்குகள் விலை, 76 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருந்தது. கொரோனா காரணமாக, ‘ஆன்லைன்’ விற்பனை அதிகரித்த காரணத்தால், இந்த அளவுக்கு அமேசான் பங்குகள் விலை உயர்ந்தன. புளூம்பெர்க் பில்லியனர்ஸ் குறியீட்டின்படி, ஜெப் பெசோஸின் சொத்து மதிப்பு, 14.22 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை