தோனியின் ‘கருப்புக்குதிரை’ | மே 08, 2021

தினமலர்  தினமலர்
தோனியின் ‘கருப்புக்குதிரை’ | மே 08, 2021

ராஞ்சி: தோனி புதியதாக ‘பிளாக் ஸ்டாலியன்’ என்ற கருப்புக்குதிரை வாங்கியுள்ளார்.

இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி 39. ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி கேப்டனாக உள்ளார். சமீபத்தில் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட, தோனி சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றார். ‘பைக்’, கார் பிரியர். விலங்குகள் மீதும் பாசம் கொண்டவர்.

இவர் தற்போது ‘பிளாக் ஸ்டாலியன்’ என்ற கருப்புக்குதிரை வாங்கியுள்ளார். இதையடுத்து ஜடேஜாவுக்குப் பின் குதிரை வைத்துள்ள இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் ஆனார் தோனி.

இதுகுறித்து தோனி மனைவி சாக் சி, தனது ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளத்தில் கருப்புக்குதிரையுடன் நாய் இருக்கும் வீடியோவை வெளியிட்டார். அதில்,‘எங்கள் வீட்டுக்கு ‘பிளாக் ஸ்டாலியன்’ வந்துள்ளது. உண்மையான ‘ஜென்டில்மேன்’, லில்லியை (நாய்) சந்தித்த போது மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டது,’ என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை