எடையை குறைக்க வேண்டும் * பிரித்விக்கு பி.சி.சி.ஐ., ‘அட்வைஸ்’ | மே 08, 2021

தினமலர்  தினமலர்
எடையை குறைக்க வேண்டும் * பிரித்விக்கு பி.சி.சி.ஐ., ‘அட்வைஸ்’ | மே 08, 2021

மும்பை: உலக டெஸ்ட் பைனலுக்கான அணியில் பிரித்வி ஷா தேர்வு செய்யப்படாததற்கு அதிகமான எடை தான் காரணம் என கூறப்படுகிறது.

இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் (ஜூன் 18–22, சவுத்தாம்ப்டன்) நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியுடன் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துவக்க வீரர் பிரித்வி ஷா 21, சேர்க்கப்படவில்லை.

சமீபத்திய விஜய் ஹசாரே தொடரில் அதிக ரன் குவித்த வீரர்களில் ‘நம்பர்–1’ இடம் பெற்றார். ஐ.பி.எல்., தொடரில் சிறப்பாக விளையாடினார். இருப்பினும் இந்திய அணியில் சேர்க்கப்படாததற்கு, இவரது அதிகமான உடல் எடை தான் காரணம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு தரப்பில் வெளியான செய்தி:

பிரித்விக்கு 21 வயது தான் ஆகிறது. இருப்பினும் ரன்கள் எடுக்கும் ஓடும் போது மந்தமாக செயல்படுகிறார். தனது உடல் எடையை நன்றாக குறைக்க வேண்டும். ஆஸ்திரேலிய தொடரின் போது பீல்டிங்கிலும் சரியாக கவனம் செலுத்தவில்லை. இத்தொடருக்குப் பின் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ரிஷாப் பன்டை பார்த்து இவர் கற்றுக் கொள்ள வேண்டும். அவரைப் போல பிரித்வியும் மீண்டு வரலாம்.

தவிர ஒரு தொடரில் மட்டுமல்லாமல், அடுத்தடுத்த தொடர்களில் சிறப்பாக விளையாட வேண்டும். ஏதாவது ஒரு உள்ளூர் தொடரில் நன்றாக விளையாடுகிறார் என தேர்வு செய்தால், சர்வதேச அளவில் சொதப்புகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மூலக்கதை