ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கிய சென்னை அணி | மே 08, 2021

தினமலர்  தினமலர்
ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கிய சென்னை அணி | மே 08, 2021

 சென்னை: கொரோனா நிவாரண பணிக்கு ஆக்சிஜன் செறிவூட்டியை சென்னை அணி வழங்கியது. 

இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒருநாளில் மட்டும் புதியதாக 27,397 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதனிடையே ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் சென்னை அணி இயக்குனர் சீனிவாசன், தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் 450 ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கினார். தமிழக கிரிக்கெட் சங்கத் தலைவர் ரூபா குருநாத்தும் உடன் இருந்தார். 

சென்னை அணி தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் வெளியிட்ட செய்தியில்,‘சென்னை அணியின் இதயத்துடிப்பாக தமிழக மக்கள் திகழ்கின்றனர். கொரோனாவுக்கு எதிரான போரில் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்,’ என தெரிவித்துள்ளார். 

மூலக்கதை