கடந்த 4 வருடங்களில் ஆப்கன் தாக்குதலில் 1600 குழந்தைகள் பலி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தினகரன்  தினகரன்
கடந்த 4 வருடங்களில் ஆப்கன் தாக்குதலில் 1600 குழந்தைகள் பலி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஆப்கன்: ஆப்கானிஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளில் வான்வழி தாக்குதலில் 1600 குழந்தைகள் பலியாகியிருப்பதாக அறிக்கை ஒன்று கூறியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு கடந்த 16 ஆண்டாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படைகள் தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 3977 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 1600 பேர் குழந்தைகள் என்று ஆப்கன் ஆயுத வன்முறைகள் பற்றி நடந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.‘கடந்த 2018ம் ஆண்டு முதல் 3 தினங்களுக்கு ஒரு முறை 4 குழந்தைகள் உயிரிழந்து வருவது 85 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. குழந்தைகள் அச்சத்தாலும், தங்கள் அன்புக்குரியவர் கண் முன்னே இறப்பதாலும், சாலையோர குண்டுவெடிப்புகளாலும் பலியாகி வருகின்றனர். குழந்தைகள் வாழ்வதற்கு தகுதியில்லாத ஒரு நாடாக ஆப்கானிஸ்தான் உருவாகிவிட்டது. சமீபகாலமாக அந்த நிலைமை இன்னும் மோசமடைந்திருக்கிறது. அதனால் இந்த 1600 என்ற எண்ணிக்கையில் ஆச்சரியமில்லை. லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு உடனடியாக உணவும், உதவியும் தேவைப்படுகிறது’ என்று சர்வதேச குழந்தைகள் காப்போம் அமைப்பின் இயக்குநரான கிரிஸ் நியாமண்டி வருத்தத்துடன் கூறுகிறார்.

மூலக்கதை