சீன தடுப்பூசிக்கு டபிள்யுஎச்ஓ அனுமதி

தினகரன்  தினகரன்
சீன தடுப்பூசிக்கு டபிள்யுஎச்ஓ அனுமதி

பீஜிங்: சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கி உள்ளது. இந்தியா, அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருப்பதால், உலக நாடுகளுக்கான தடுப்பூசி விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கி உள்ளது. சீன தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் வழங்கும் முதல் அனுமதி இது. இது ஒரு மைல் கல் சாதனை என குறிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம், இதன் மூலம் உலகின் தடுப்பூசி தேவை இனி பூர்த்தி செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மூலக்கதை