பாக்.,கில் சாதித்த ஹிந்து பெண்

தினமலர்  தினமலர்
பாக்.,கில் சாதித்த ஹிந்து பெண்

இஸ்லாமாபாத், : பாகிஸ்தானில் கவுரவமிக்க, சி.எஸ்.எஸ்., எனப்படும், சென்ட்ரல் சுபீரியர் சர்வீஸ் தேர்வில், முதல் முறையாக, ஹிந்து பெண் ஒருவர் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளார்.

பி.ஏ.எஸ்., எனப்படும், பாகிஸ்தான் ஆட்சிப்பணிக்கான அதிகாரிகள், சி.எஸ்.எஸ்., தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர். சி.எஸ்.எஸ்., - 2020 தேர்வை, 18 ஆயிரத்து, 553 பேர் எழுதினர். இதில், 221 பேர் தேர்ச்சி பெற்றனர்.தேர்ச்சி பெற்றவர்களில், சிந்து மாகாணம், ஷிகார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிந்து பெண்ணான சனா ராமாசந்தும் ஒருவர். இதையடுத்து, இவர், பி.ஏ.எஸ்., பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது பற்றி, சனா கூறுகையில், ''இந்த பெருமை முழுதும், என் பெற்றோரையே சாரும்,''என்றார். பாகிஸ்தானில், சி.எஸ்.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற, முதல் ஹிந்து பெண் என்ற பெருமை, சனாவுக்கு கிடைத்துள்ளது.

மூலக்கதை