சென்னை அணி செயலுக்கு எதிர்ப்பு * பயிற்சியாளர்களை அழைத்தது சரியா | மே 07, 2021

தினமலர்  தினமலர்
சென்னை அணி செயலுக்கு எதிர்ப்பு * பயிற்சியாளர்களை அழைத்தது சரியா | மே 07, 2021

சென்னை: கொரோனா பாதித்த பாலாஜி, மைக்கேல் ஹசியை விதிகளை மீறி சென்னை  அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடந்தது. வருண் சக்ரவர்த்தி, சந்தீப், சகா, அமித் மிஸ்ரா, சென்னை அணி பவுலிங் பயிற்சியாளர், தமிழகத்தின் பாலாஜி, பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசிக்கு கொரோனா ஏற்பட்ட ஐ.பி.எல்., தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே சென்னை சார்பில் பாலாஜி, ஹசி இருவரும் தனித்தனி விமானங்களில் டில்லியில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டு, சிகிச்சை தரப்படுகிறது. 

சென்னை அணியில் இந்தச் செயலுக்கு மற்ற அணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களை 10 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். கடைசி இரு நாட்களில் நடக்கும் சோதனையில் தேற வேண்டும், தவிர எவ்வித அறிகுறியும் இல்லாமல் இருந்தால் மட்டுமே அறையை விட்டு வெளியேற வேண்டும்,’ இந்திய கிரிக்கெட் போர்டு விதிகள் தெரிவித்துள்ளன. 

இதுகுறித்து ஐ.பி.எல்., அணியின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘கொரோனா பாதிப்பு ஏற்பட்ட இருவரை அறையை விட்டு எப்படி வெளியேற அனுமதித்தனர். அவர்களை அழைத்துச் சென்ற டிரைவர், விமானநிலைய பணியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதே. பி.சி.சி.ஐ., விதிகள் மட்டுமல்ல அரசின் விதிகளும் தெளிவாக உள்ளன. ஆனால் ஐ.பி.எல்., தொடரின் ஒரு முன்னணி அணி எப்படி, இப்படிச் செய்யலாம்,’’ எனக் கேட்டுள்ளார்.

மூலக்கதை