‘மாஸ்க்’ வழங்குகிறார் அஷ்வின் | மே 07, 2021

தினமலர்  தினமலர்
‘மாஸ்க்’ வழங்குகிறார் அஷ்வின் | மே 07, 2021

சென்னை: ‘‘பல முறை பயன்படுத்தும் ‘என் 95 மாஸ்க்’ கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,’’ என அஷ்வின் தெரிவித்தார்.

இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். 14வது சீசன் ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்றிருந்த இவர், கொரோனா பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக இருக்கப் போவதாக, திடீரென விலகினார். 

நான்கு சிறுவர்கள், 6 பெரியவர்கள் என 10 பேருக்கு கொரோனா ஏற்பட்டதாக அஷ்வின் மனைவி பிரீத்தி தெரிவித்தார். இதனிடையே தரமான ‘மாஸ்க்’ அணிவது, தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து அஷ்வின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அஷ்வின் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தி:

 எல்லோரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மனித உயிர்களை பறிக்கின்ற இந்த கொடூரமான கொரோனா வைரசை எதிர்த்துப் போராட, இது ஒன்று தான் சிறந்த வழி. ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க, இரண்டு ‘மாஸ்க்’ அணியுங்கள், துணியால் ஆன ‘மாஸ்க்’ அணிய வேண்டாம்.

 ‘என் 95 மாஸ்க்’ துவைத்து மறுபடியும் பயன்படுத்தலாம். இதை வாங்க இயலாமல் சிரமப்படுகின்றவர்களுக்கு, என்னால் முடிந்தளவு வாங்கிக் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவற்றை எப்படி விநியோகிப்பது என்ற வழிமுறைகள் உங்களுக்கு அல்லது வேறு யாருக்கும் தெரிந்தால் எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

 

ஜடேஜா வேண்டுகோள்

இந்திய அணி வீரர் ஜடேஜா வெளியிட்ட வீடியோ செய்தியில்,‘நம்மை சுற்றியுள்ளவர்கள் பலர் தங்களுக்கு உதவி தேவைப்பட்டாலும், மற்றவர்களிடம் கேட்கத் தயங்குவர். நீங்களாகச் சென்று ஏதாவது உதவி வேண்டுமா என கேளுங்கள், கைகொடுங்கள். இந்த கடினமான நேரத்தில் நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் இந்த கொரோனா பிடியில் இருந்து மீண்டு விடலாம்,’ என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை