உங்களால் கொரோனா வேகமாக பரவுது; ‘நெகடிவ்’ சான்று வாங்கிட்டு மேற்குவங்கத்தில் நுழைங்க!: பாஜக தலைவர்களுக்கு மம்தா உத்தரவு

தினகரன்  தினகரன்
உங்களால் கொரோனா வேகமாக பரவுது; ‘நெகடிவ்’ சான்று வாங்கிட்டு மேற்குவங்கத்தில் நுழைங்க!: பாஜக தலைவர்களுக்கு மம்தா உத்தரவு

கொல்கத்தா: கொரோனா வேகமாக பரவுவதால், ‘நெகடிவ்’ சான்றுடன் பாஜக தலைவர்கள் மேற்குவங்கம் வர வேண்டும் என்று முதல்வர் மம்தா உத்தரவிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற வன்முறையில் பாஜக - திரிணாமுல் தொண்டர்களிடையே மோதல் அதிகரித்துவந்தது. இதில் பாஜக - திரிணாமுல் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் 16 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. முன்னதாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், ‘கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்.மேற்குவங்க மாநிலத்திற்கு வருவதற்கு முன்பு, பாஜக தலைவர்கள் ‘ஆர்டி-பிசிஆர் நெகடிவ்’ (கொரோனா பாதிப்பு இல்லை) சான்று பெறுவது கட்டாயம். பாஜக தலைவர்கள் அடிக்கடி மேற்குவங்கம் வருவதால், மாநிலத்தில் தொற்றுநோய் வேகமாக பரவி வருகிறது. மத்திய அமைச்சர்கள் ேமற்குவங்கம் வந்தால் கூட, அவர்களும் ஆர்டி-பிசிஆர் நெகடிவ் சான்று பெற்றிருக்க வேண்டும். விமான நிலையத்திலேயே அவர்கள் அதனை சமர்பிக்க வேண்டும். கொரோனா விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்’ என்றார். முதல்வர் மம்தாவின் இந்த உத்தரவால், மற்ற மாநிலங்களில் இருந்து மேற்குவங்கம் செல்லும் பாஜக தலைவர்கள், ஆர்டி-பிசிஆர் நெகடிவ் சான்று பெறவேண்டும் என்பது கட்டாயமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்றார். அவரை ெதாடர்ந்து மத்திய வெளியுறவு இணை அமைச்சர் முரளீதரன் மேற்குவங்கத்திற்கு சென்றார். இவரது பாதுகாப்பு வாகனங்களின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால், திடீர் பதற்றம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் முரளீதரன் கூறுகையில், ‘மேற்கு மிட்னாபூரில் எனது பாதுகாப்பு காவலரை திரிணாமுல் கட்சியை சேர்ந்த குண்டர்கள் தா காரின் ஜன்னலை கல்வீசி தாக்கி உடைத்தனர்’ என்றார்.

மூலக்கதை