ஜடேஜா, விஹாரி தேர்வு: இந்திய அணி அறிவிப்பு | மே 07, 2021

தினமலர்  தினமலர்
ஜடேஜா, விஹாரி தேர்வு: இந்திய அணி அறிவிப்பு | மே 07, 2021

புதுடில்லி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரவிந்திர ஜடேஜா, ஹனுமா விஹாரி அணிக்கு திரும்பினர்.

இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, வரும் ஜூன் 18ல் சவுத்தாம்ப்டனில் துவங்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியுடன் விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் வரும் ஆக. 4–8ல் நடக்கிறது. மற்ற போட்டிகள் லார்ட்ஸ் (ஆக. 12–16), லீட்ஸ் (ஆக. 25–29), ஓவல் (செப். 2–6), மான்செஸ்டர் (செப். 10–14) நகரங்களில் நடக்கவுள்ளன.

இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் புவனேஷ்வர் குமார், பிரித்வி ஷா, ஹர்திக் பாண்ட்யாவுக்கு இடம் கிடைக்கவில்லை. சுழற்பந்துவீச்சாளர்களாக அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவிந்திர ஜடேஜா தேர்வாகினர். வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் இடம் பிடித்துள்ளனர். கேப்டனாக விராத் கோஹ்லி, துணை கேப்டனாக ரகானே தொடர்கின்றனர். ரோகித் சர்மா, சுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷாப் பன்ட் இடம் பெற்றுள்ளனர். உடற்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் விரிதிமன் சகா, லோகேஷ் ராகுல் தேர்வு செய்யப்படுவர். மாற்று வீரர்களாக அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், அர்ஜான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய அணி: கோஹ்லி (கேப்டன்), ரகானே (துணை கேப்டன்), ரோகித் சர்மா, சுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, விஹாரி, ரிஷாப் பன்ட், அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.

மூலக்கதை