கோஹ்லி, அனுஷ்கா ரூ. 2 கோடி நிதியுதவி: ‘கொரோனா’ நிவாரண பணிக்கு | மே 07, 2021

தினமலர்  தினமலர்
கோஹ்லி, அனுஷ்கா ரூ. 2 கோடி நிதியுதவி: ‘கொரோனா’ நிவாரண பணிக்கு | மே 07, 2021

மும்பை: ‘கொரோனா’ நிவாரண பணிகளுக்காக கோஹ்லி, அனுஷ்கா தம்பதி ரூ. 2 கோடி வழங்கியது. மொத்தம் ரூ. 7 கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் ‘கொரோனா’ தொற்றின் இரண்டாவது அலை வீசுகிறது. இதன் தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் இந்தியாவின் சச்சின், ஷிகர் தவான், ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ், பிரட் லீ உள்ளிட்டோர் நிவாரண நிதி வழங்கினர். இதனிடைய 14வது ஐ.பி.எல்., தொடர் பாதியில் ஒத்திவைக்கப்பட்டதால் வீடு திரும்பிய இந்திய அணி கேப்டன் கோஹ்லி 32, மனைவி அனுஷ்காவுடன் இணைந்து கொரோனா தடுப்பு பணிகளில் கவனம் செலுத்துகிறார். இதற்காக  ‘கேட்டோ’ என்ற அமைப்பை துவக்கி, ரூ. 7 கோடி வரை நிவாரண நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். தங்களது பங்களிப்பாக ரூ. 2 கோடி வழங்கினர்.

இதுகுறித்து கோஹ்லி–அனுஷ்கா இணைந்து சமூகவலைதளத்தில் வெளியிட்ட வீடியோ செய்தி:

இந்தியாவில் நடக்கும் விஷயங்கள் கடினமானவை. நாம் அனைவரும் கொரோனாவை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தியா இந்தளவுக்கு பாதிக்கப்பட்டதை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. இரவு, பகல் பாராமல் போராடும் முன்களப்பணியாளர்கள் நன்றி. நானும், அனுஷ்காவும் இணைந்து கொரோனா நிவாரணத்திற்காக நிதி திரட்ட முடிவு செய்துள்ளோம். இதற்காக ‘கேட்டோ’ அமைப்பை துவங்கியுள்ளோம். இதற்கு உங்கள் ஆதரவு கிடைத்தால் நன்றி. உதவி தேவைப்படும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு கைகொடுப்போம். நீங்கள் அனைவரும் நன்கொடை தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் செய்யும் சிறிய உதவி பெரிய மாறுதலை ஏற்படுத்தும். நமது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரும் தோளோடு தோள் சேர்த்து நிற்போம். இந்த கடினமான சூழலில் இருந்து மீண்டு வருவோம். ஒருங்கிணைந்து செயல்பட்டால் இந்த கொரோனா எதிர்ப்பு போரில் வெற்றி பெற முடியும், எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை