பண்ணை வீட்டில் ஜடேஜா | மே 06, 2021

தினமலர்  தினமலர்
பண்ணை வீட்டில் ஜடேஜா | மே 06, 2021

ஜாம்நகர்: ஐ.பி.எல்., தொடர் ரத்தானதால் சென்னை வீரர் ஜடேஜா, தனது பண்ணை வீட்டில் ஓய்வில் உள்ளார்.

இந்திய அணியின் ‛ஆல்–ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா 32. ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்காக விளையாடுகிறார். சமீபத்தில், வீரர்களுக்கு ‛கொரோனா’ தொற்று உறுதியானதால், 14வது ஐ.பி.எல்., சீசன் பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து ஜடேஜா, குஜராத் மாநிலத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்றார். அங்குள்ள குதிரைகளை பராமரித்து வரும் இவர், சவாரி செய்து வருகிறார்.

தனது குதிரைகளின் புகைப்படத்தை ‛டுவிட்டரில்’ பதிவிட்டுள்ள ஜடேஜா வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛நான் மிகவும் பாதுகாப்பாக உணரும் இடத்துக்கு திரும்பிவிட்டேன்,’’ என, தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த போது, தனது பண்ணை வீட்டில் குதிரை சவாரி செய்த வீடியோவை ஜடேஜா ‛டுவிட்டரில்’ பதிவிட்டிருந்தார்.

மூலக்கதை