இங்கிலாந்து செல்லும் நியூசி., வீரர்கள் | மே 06, 2021

தினமலர்  தினமலர்
இங்கிலாந்து செல்லும் நியூசி., வீரர்கள் | மே 06, 2021

புதுடில்லி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பங்கேற்பதற்காக கேன் வில்லியம்சன், சான்ட்னர் உள்ளிட்ட நியூசிலாந்து வீரர்கள் இங்கிலாந்துக்கு செல்லவுள்ளனர்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரும் ஜூன் 18ல் சவுத்தாம்ப்டனில் துவங்குகிறது. இதற்கு தயாராகும் விதமாக இங்கிலாந்து செல்லும் நியூசிலாந்து அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் லண்டனில் வரும் ஜூன் 2ல் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் பர்மிங்காமில் ஜூன் 10ல் துவங்குகிறது.

இத்தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள கேப்டன் கேன் வில்லியம்சன், மிட்சல் சான்ட்னர், கைல் ஜேமிசன், டிரண்ட் பவுல்ட் ஆகியோர் 14வது ஐ.பி.எல்., சீசனில் பங்கேற்றனர். ஐ.பி.எல்., தொடர் பாதியில் ஒத்திவைக்கப்பட்டதால் வில்லியம்சன், ஜேமிசன், சான்ட்னர், வரும் மே 11ல் இங்கிலாந்து செல்லவுள்ளனர். இதற்காக இவர்கள் மூவரும் டில்லியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். டிரண்ட் பவுல்ட் மட்டும் குடும்பத்தினரை சந்திப்பதற்காக சொந்த ஊருக்கு செல்கிறார். இவர், ஜூன் மாத துவக்கத்தில் இங்கிலாந்துக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து தொடருக்கு தேர்வாகாத மற்ற நியூசிலாந்து வீரர்கள் தாயகம் திரும்புகின்றனர். இம்முறை 14வது ஐ.பி.எல்., தொடரில் நியூசிலாந்து சார்பில் 10 வீரர்கள் உட்பட 17 பேர் பங்கேற்றனர்.

மூலக்கதை