‘ஹேப்பி பெர்த் டே’ சஞ்சனா * மனைவிக்கு பும்ரா வாழ்த்து | மே 06, 2021

தினமலர்  தினமலர்
‘ஹேப்பி பெர்த் டே’ சஞ்சனா * மனைவிக்கு பும்ரா வாழ்த்து | மே 06, 2021

மும்பை: மனைவி சஞ்சனாவுக்கு இந்திய வீரர் பும்ரா, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இவரது மனைவி ‘டிவி’ தொகுப்பாளினி சஞ்சனா. இவர்களுக்கு கடந்த மார்ச் 15ல் கோவாவில் திருமணம் நடந்தது. அதேவேகத்தில் ஐ.பி.எல்., தொடரில் சஞ்சனா போட்டிகளை தொகுத்து வழங்க, மும்பை அணிக்காக  களமிறங்கிய பும்ரா, சக வேகப்பந்து வீச்சாளர் டிரன்ட் பவுல்ட்டுடன் இணைந்து மிரட்டினார்.

இதனிடையே நேற்று சஞ்சனா பிறந்த நாள் கொண்டாடினார். மனைவிக்கு வாழ்த்த தெரிவித்த பும்ரா, இருவரும் இருக்கும் போட்டோவை ‘டுவிட்டரில்’ வெளியிட்டார். அதில்,‘என் இதயத்தை தினமும் திருடும் நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீ எனக்கானவள், உன்னை நான் நேசிக்கிறேன்,’ என தெரிவித்துள்ளார்.

மும்பை அணிக்காக விளையாடிய சக வீரர் ஜிம்மி நீஷம், தனது ‘இன்ஸ்டாகிராம்’ செய்தியில்,‘நீங்கள் பவுல்ட் பற்றித் தான் பேசுகிறீர்கள் என ஒருநிமிடம் நினைத்து விட்டேன்,’ என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

மூலக்கதை