சென்னையில் பாலாஜி, ஹசி * வீடு திரும்பினார் தோனி | மே 06, 2021

தினமலர்  தினமலர்
சென்னையில் பாலாஜி, ஹசி * வீடு திரும்பினார் தோனி | மே 06, 2021

சென்னை: பயிற்சியாளர்கள் மைக்கேல் ஹசி, பாலாஜி இருவரும் டில்லியில் இருந்து தனித்தனியாக சென்னை அழைத்து வரப்பட்டனர்.

இந்தியாவில் நடந்த ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது தோனி தலைமையிலான சென்னை அணி. பங்கேற்ற 7 போட்டிகளில் 5ல் வென்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது. 

இந்நிலையில் அணியின் பவுலிங் பயிற்சியாளர், தமிழகத்தின் பாலாஜி, பேட்டிங் பயிற்சியாளர், ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹசி இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

தவிர ஐ.பி.எல்., தொடரும் ஒத்திவைக்கப்பட, வீரர்கள் வீடு திரும்பி வருகின்றனர். சென்னை அணி கேப்டன் தோனி மற்ற வீரர்கள் அனைவரும் அவரவர் ஊர்களுக்கு  கிளம்பும் வரை டில்லியில் இருந்தார். இதன்பின் தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு திரும்பினார். இதனிடையே ஹசி, பாலாஜி இருவரும் தனித்தனி ‘ஏர் ஆம்புலன்ஸ்’ உதவியால் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

சென்னை அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,‘‘ஹசி, பாலாஜி என இருவரும் எவ்வித அறிகுறியும் இல்லாமல் தேறி வருகின்றனர். ஒருவேளை கூடுதல் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில், எங்களுக்கு நன்கு அறிமுகமான சென்னையில் வைத்து சிகிச்சையை தொடர முடிவு செய்துள்ளோம். இதனால் இருவரையும் ‘ஏர் ஆம்புலன்ஸ்’ மூலம் சென்னை அழைத்து வர முடிவு செய்தோம். அடுத்தடுத்த சோதனையில் தேறியதும் இந்தியாவில் இருந்து ஹசி நாடு திரும்ப, தனி விமானம் ஏற்பாடு செய்து தருவோம்,’’ என்றார்.

மூலக்கதை