குண்டுவெடிப்பில் சபாநாயகர் காயம்

தினமலர்  தினமலர்
குண்டுவெடிப்பில் சபாநாயகர் காயம்

மாலே ; குண்டுவெடிப்பு தாக்குதலில், மாலத்தீவு சபாநாயகர் மொகமது நஷீத் காயமடைந்தார்.நம் அண்டை நாடான மாலத்தீவின் மாலேவில், முன்னாள் அதிபரும், பார்லிமென்டின் தற்போதைய சபாநாயகருமான மொகமது நஷீத், 53, தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், நேற்று, தன் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறச் சென்றபோது, அருகே குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில், நஷீத் மற்றும் அவரின் பாதுகாவலரும் காயமடைந்தனர். பின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நஷீதுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மூலக்கதை