ரஜினி படத்தை இயக்குகிறாரா தேசிங்கு பெரியசாமி?

தினமலர்  தினமலர்
ரஜினி படத்தை இயக்குகிறாரா தேசிங்கு பெரியசாமி?

துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி. இந்த படத்தில் இயக்குனர் கெளதம் மேனனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், தேசிங்கு பெரியசாமிக்கு கால் பண்ணி, படம் மிகவும் சிறப்பாக இருந்ததாக சொல்லி அவரை வாழ்த்தியவர், தனக்கும் ஒரு கதை ரெடி பண்ணுமாறு கேட்டுக் கொண்டார். இதுகுறித்த ஆடியோ ஒன்றும் முன்பு சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.

அதனால் அண்ணாத்த படத்தை முடித்ததும் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கயிருப்பதாக தொடர்ந்து செய்திகள் பரவிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் தற்போது தனது டுவிட்டரில் அதுகுறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் தேசிங்கு பெரியசாமி.

அவர் கூறுகையில், என்னுடைய அடுத்த படம் குறித்து வெளியாகி வரும் செய்திகள் உண்மையில்லை. ஆனால் எனது அடுத்த படம் என்ன என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும். அனைவரது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. பாதுகாப்புடன் இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த தகவலை அடுத்து ரஜினியின் அடுத்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

மூலக்கதை