கைவசம் உள்ள படங்களுக்கே முன்னுரிமை : பூஜா ஹெக்டே

தினமலர்  தினமலர்
கைவசம் உள்ள படங்களுக்கே முன்னுரிமை : பூஜா ஹெக்டே

கடந்த மாதம் கொரோனா பாதிப்புக்கு உள்ளான பூஜா ஹெக்டே தொடர்ந்து தனிமையில் இருந்து வருகிறார். அதோடு இந்த வார இறுதியில் வெளியே வரப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மகேஷ்பாபு, திரிவிக்ரம் இணையும் படத்தில் பூஜா ஹெக்டே நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கு தனது சார்பில் ஒரு பதில் வெளியிட்டுள்ளார் பூஜா ஹெக்டே. அதில், தற்போது எனது கைவசம் ஆச்சார்யா, ராதே ஷியாம், மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர், சர்க்கஸ் ஆகிய படங்கள் உள்ளன. விஜய் 65ஆவது படத்தில் நடிக்கிறேன்.

அதனால் இப்போதைக்கு எனது முழுக்கவனமும் கைவசமுள்ள இந்த படங்களில் தான் உள்ளது. கொரோனா தொற்றுக்குப்பிறகு இந்த படங்களில் நடிப்பதில் முழுக்கவனமும் செலுத்தப்போகிறேன். அதன்பிறகுதான் மற்ற நடிகர்களின் படங்களில் நடிப்பது பற்றி யோசிப்பேன். கைவசமுள்ள படங்களை முடித்த பிறகுதான் புதிய படங்களுக்கு கால்சீட் கொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் பூஜா ஹெக்டே.

மூலக்கதை