உயரத்தில் ஏற்றிவிட்ட இயக்குனருக்கு மீண்டும் கைகொடுக்கும் பிஜுமேனன்

தினமலர்  தினமலர்
உயரத்தில் ஏற்றிவிட்ட இயக்குனருக்கு மீண்டும் கைகொடுக்கும் பிஜுமேனன்

மலையாளத்தில் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக வில்லன் நடிகராகவும் சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்தவர் தான் நடிகர் பிஜுமேனன். தமிழில் தம்பி, பழனி உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, மலையாளத்தில் வெள்ளிமூங்கா என்கிற படத்தில், கதையின் நாயகனாக நடித்திருந்தார் பிஜு மேனன். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, முன்னணி நடிகர்களின் வரிசைக்கு உயர்ந்தார் பிஜுமேனன்.

அந்த படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குனர் ஜிபு ஜேக்கப். அந்த படத்தை தொடர்ந்து அவருக்கு மோகன்லால் நடித்த 'முந்திரிவல்லிகள் தளிர்க்கும்போல்' என்கிற படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் படம் வெற்றி பெறவில்லை. அதைத் தொடர்ந்து மீண்டும் ஆத்ய ராத்திரி என்கிற படத்தை தன்னை வைத்து இயக்கும் வாய்ப்பைத் தந்தார் பிஜுமேனன் அந்த படமும் தோல்வியை தழுவியது.

தற்போது கர்ணன் பட நாயகி ரஜிஷா விஜயனை வைத்து 'எல்லாம் சரியாகும்' என்கிற படத்தை இயக்கி உள்ளார் ஜிபு ஜேக்கப். இந்த நிலையில் ஜிபு ஜேக்கப்புக்கு கைகொடுத்து தூக்கிவிடும் விதமாக, மீண்டும் அவரது டைரக்ஷனில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் பிஜுமேனன். தற்போது அவர் எடுத்து வரும் பட டைட்டில் பாணியில் சொல்வதென்றால் இனி ஜிபு ஜேக்கப்பிற்கு எல்லாம் சரியாகும் என்று சொல்லலாம்.

மூலக்கதை