ஜம்முவில் தீவிரவாதியை பிடிக்க என்கவுன்டர்

தினகரன்  தினகரன்
ஜம்முவில் தீவிரவாதியை பிடிக்க என்கவுன்டர்

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் போமாயில் உள்ள நதிபோராவில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் அந்த  பகுதிக்கு விரைந்தனர். தீவிரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள், வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதனை தொடர்ந்து ராணுவ வீரர்களும் தகுந்த  பதிலடி கொடுத்தனர். இதில் தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி சென்று தலைமறைவாகினார்கள். அவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். 2 கவுன்சிலர்கள், போலீஸ்காரர் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு  வந்த வெளிநாட்டு தீவிரவாதி இந்த என்கவுன்டர் சம்பவத்தின்போது அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை