உ.பி. முதல்வருக்கு கொலை மிரட்டல்

தினகரன்  தினகரன்
உ.பி. முதல்வருக்கு கொலை மிரட்டல்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. யோகிக்கு கடந்த 2017ம் ஆண்டு முதல் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், நேற்று அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து முதல்வர் யோகிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. மாநில போலீசின் வாட்ஸ்அப் எமர்ஜென்சி எண் `112’க்கு கடந்த 29ம் தேதி இந்த கொலை மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. அதில்  “இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கின்றது” என அடையாளம் தெரியாத நபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சுசாந்த் கோல்ப் நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபரை கண்டறிந்து கைது செய்வதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் யோகிக்கு கொலை மிரட்டல் வருவது இது முதல் முறை  அல்ல. இதற்கு முன்னர், கடந்தாண்டு செப்டம்பர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இதேபோன்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை