ஐ.பி.எல்., தொடர் ஒத்திவைப்பு | மே 04, 2021

தினமலர்  தினமலர்
ஐ.பி.எல்., தொடர் ஒத்திவைப்பு | மே 04, 2021

புதுடில்லி: வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. 

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடந்தது. இதுவரை 29 போட்டிகள் முடிந்துள்ளன. இரண்டாவது கட்ட போட்டிகள் நடந்து வந்தன. இந்நிலையில் கோல்கட்டா அணியின் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியார் என இருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் பெங்களூரு–கோல்கட்டா மோத இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. 

டில்லியில் உள்ள சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி, பஸ் உதவியாளர் (‘கிளீனர்’) என இருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் ஐதராபாத் அணிக்கு எதிராக மோத வேண்டிய ஆட்டம் நிறுத்தப்பட்டது. 

திடீர் திருப்பமாக ஐதராபாத் அணியின் சகா, டில்லி ‘சீனியர்’ சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ராவுக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. தவிர வெளிநாட்டு வீரர்கள் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க தயங்கியதாகவும் கூறப்பட்டது. 

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு, ஐ.பி.எல்., கட்டுப்பாட்டுக்குழுவினர் இணைந்து ஆலோசித்தனர். முடிவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனை ஒத்திவைப்பது என முடிவு செய்யப்பட்டது. 

ஐ.பி.எல்., தலைவர் பிரிஜேஷ் படேல் கூறுகையில்,‘‘ஐ.பி.எல்., தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுகிறது. மற்ற போட்டிகளின் அட்டவணைக்கு ஏற்ப மீண்டும் தொடரை நடத்த முயற்சிப்போம். ஆனால் இம்மாதம் நடப்பது சந்தேகம் தான்,’’ என்றார். 

மூலக்கதை