சிறந்த ‘பீல்டர்’ ஜடேஜா: நியூசிலாந்து ‘ஆல்–ரவுண்டர்’ பாராட்டு | மே 04, 2021

தினமலர்  தினமலர்
சிறந்த ‘பீல்டர்’ ஜடேஜா: நியூசிலாந்து ‘ஆல்–ரவுண்டர்’ பாராட்டு | மே 04, 2021

புதுடில்லி: ‘‘தற்போதுள்ள வீரர்களில் மேக்ஸ்வெல், ரவிந்திர ஜடேஜா தான் உலகின் தலைசிறந்த ‘பீல்டர்கள்’, என, ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் ‘ஆல்–ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா. 14வது ஐ.பி.எல்., சீசனில் இதுவரை பங்கேற்ற 7 போட்டியில் 131 ரன் (161.72 ‘ஸ்டிரைக் ரேட்’), 6 விக்கெட், 7 ‘கேட்ச்’ என, ‘ஆல்–ரவுண்டராக’ அசத்தினார்.

இதுகுறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் ‘ஆல்–ரவுண்டர்’ ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியது: ரவிந்திர ஜடேஜா சிறந்த கிரிக்கெட் வீரர். ‘பேட்டிங்’, ‘பவுலிங்’, ‘பீல்டிங்’ என, மூன்று விதத்திலும் சிறப்பாக செயல்படுகிறார். எனக்கு இவரது ‘பீல்டிங்’ மிகவும் பிடிக்கும். குறிப்பாக எதிரணி பேட்ஸ்மேனை ‘ரன்–அவுட்’ செய்யும் விதம் தனிச்சிறப்பு. தற்போதுள்ள வீரர்களில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், இந்தியாவின் ஜடேஜாவை உலகின் சிறந்த ‘பீல்டர்களாக’ கூறுவேன்.

ஐ.பி.எல்., சென்னை அணிக்கான ‘பேட்டிங்’ வரிசையில் ஜடேஜாவை முன்னதாக களமிறக்க வேண்டும் என்று கடந்த சீசனில் வலியுறுத்தினேன். அது, இம்முறை நடந்ததில் மகிழ்ச்சி. போலார்டு, ஹர்திக் பாண்ட்யா, டிவிலியர்ஸ் போல அதிரடியாக ரன் சேர்க்கும் திறமை இவரிடம் உள்ளது. எனவே இவர், சற்று முன்னதாக களமிறங்கினால் அணியின் ஸ்கோரை விரைவாக உயர்த்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை