என் இதயம் வலிக்கிறது * பீட்டர்சன் உருக்கம் | மே 04, 2021

தினமலர்  தினமலர்
என் இதயம் வலிக்கிறது * பீட்டர்சன் உருக்கம் | மே 04, 2021

புதுடில்லி: ‘‘எனக்குப் பிடித்த இந்தியா, கொரோனாவால் அவதிப்படுவதை பார்க்கும் போது இதயம் வலிக்கிறது,’’ என பீட்டர்சன் தெரிவித்தார்.

இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் பீட்டர்சன் 40. ஐ.பி.எல்., தொடரில் வர்ணனையாளராக இருந்தார். வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து பீட்டர்சன் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதில்,‘‘இந்தியாவை நான் மிகவும் நேசிக்கிறேன். தற்போது கொரோனாவால் அவதிப்படுவதை பார்க்கும் போது எனது இதயம் வலிக்கிறது. இந்த கடினமான காலத்தை எதிர்கொண்டு, இதிலிருந்து விரைவில் வலிமையாக மீண்டு வருவீர்கள். இக்கட்டான இந்த காலத்திலும் உங்களது அன்பும், பெருந்தன்மையும் எப்போதும் கவனிக்கப்படாமல் போகாது,’ என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை