பறிபோகிறதா ‘உலக’ வாய்ப்பு * விரைவில் ஐ.சி.சி., முடிவு | மே 04, 2021

தினமலர்  தினமலர்
பறிபோகிறதா ‘உலக’ வாய்ப்பு * விரைவில் ஐ.சி.சி., முடிவு | மே 04, 2021

துபாய்: ஐ.பி.எல்., தொடர் ரத்து செய்யப்பட்டதால், இந்தியாவில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை எமிரேட்சிற்கு மாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் வரும் அக்டோபர்–நவம்பர் மாதங்களில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்க உள்ளது. இதற்காக மும்பை, சென்னை, கோல்கட்டா என ஒன்பது மைதானங்கள் பரிந்துரை செய்யப்பட்டன. உலகின் மிகப்பெரிய ஆமதாபாத், மோடி மைதானத்தில் பைனல் நடக்கவுள்ளது.

கொரோனா காரணமாக இத்தொடர் எமிரேட்சிற்கு மாற்றப்படும் என பேச்சு எழுந்தது. இதற்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மறுப்பு தெரிவித்தது. தற்போது 14 வது சீசன் ஐ.பி.எல்., தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடத்தும் உரிமையை இந்தியா இழக்கும் எனத் தெரிகிறது.

பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ‘டெய்லி டான்’ பத்திரிகையில்,‘சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டை தொடர்பு கொண்டு, ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஏறக்குறைய 90 சதவீத பேச்சுவார்த்தை முடிந்து விட்டன. தற்போது தொடரை மாற்றுவது குறித்து ஐ.சி.சி., பி.சி.சி.ஐ.,யிடம் பேசி வருகிறது. அடுத்த இரு வாரங்களில் அறிவிப்பு வெளியாகும்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை