வீட்டுக்கு வாங்க அப்பா * வார்னர் மகள் உருக்கம் | மே 04, 2021

தினமலர்  தினமலர்
வீட்டுக்கு வாங்க அப்பா * வார்னர் மகள் உருக்கம் | மே 04, 2021

புதுடில்லி: ‘‘உடனே கிளம்பி நேராக வீட்டுக்கு வாங்க அப்பா,’’ என வார்னர் மகள் இவி மே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் அணி கேப்டனாக இருந்தவர் ஆஸ்திரேலிய அணியின் வார்னர். முதல் 6 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற, வார்னர் நீக்கப்பட்டு வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அடுத்து நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வார்னர் சேர்க்கப்படவே இல்லை.

தற்போது ஐ.பி.எல்., தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. இந்திய விமானங்களுக்கு ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளதால், வார்னர் மே 15க்குப் பிறகு தான் செல்ல முடியும். இதனிடையே வார்னர் மகள் இவி வரைந்த போட்டோவை தனது ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளத்தில் வெளியிட்டார். அதில்,‘ அப்பா, உடனே கிளம்பி நேராக வீட்டுக்கு வாங்க. நாங்கள் உங்களை அதிகமாக ‘மிஸ்’ செய்கிறோம்,’ என எழுதியிருந்தார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மூலக்கதை