இந்திய வீராங்கனைகளுக்கு அனுமதி | மே 04, 2021

தினமலர்  தினமலர்
இந்திய வீராங்கனைகளுக்கு அனுமதி | மே 04, 2021

புதுடில்லி: இங்கிலாந்தில் நடக்க உள்ள ‘100 பந்து’ கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய வீராங்கனைகளுக்கு அனுமதி தரப்பட்டது.

இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் போர்டு சார்பில் புதிய முயற்சியாக ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்கும் ‘தி ஹண்ரடு’ கிரிக்கெட் தொடர் நடத்தப்பட உள்ளது. இரு தரப்பிலும் 100 பந்துகள் மட்டும் வீசப்படும். கடந்த ஆண்டு நடக்க இருந்த தொடர் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது.

வரும் ஜூலை 21ல் தொடர் துவங்கவுள்ளது. நான்கு அணிகள் மோதும் இத்தொடரில் பங்கேற்க எல்லீஸ் பெர்ரி உள்ளிட்ட 11 ஆஸ்திரேலிய வீராங்கனைகள் என, இதுவரை 24 அன்னிய அணி வீராங்கனைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்தியா சார்பில் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, ‘ஆல் ரவுண்டர்’ தீப்தி சர்மா என நான்கு பேர் பங்கேற்க இந்திய கிரிக்கெட் போர்டு அனுமதி வழங்கியது.

பயணம் எப்போது

இந்திய பெண்கள் அணி இங்கிலாந்து மண்ணில் மூன்று ஒருநாள், மூன்று ‘டுவென்டி–20’ மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க செல்லவுள்ளது. டெஸ்ட் போட்டி ஜூன் 16ல் பிரிஸ்டலில் துவங்கவுள்ளது. மூன்றாவது ‘டுவென்டி–20’ ஜூலை 15ல் முடிந்த பின், ‘தி ஹண்ரடு’ தொடரில் பங்கேற்குள் நான்கு இந்திய வீராங்கனைகள் மட்டும் இங்கிலாந்தில் தொடர்ந்து தங்குவர். மற்றவர்கள் நாடு திரும்புவர்.

மூலக்கதை