நாடு முழுவதும் முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு: ராகுல்காந்தி கருத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாடு முழுவதும் முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு: ராகுல்காந்தி கருத்து

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என்று ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டு வரும்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று வௌியிட்டு டுவிட்டர் பதிவில், ‘கொரோனா பரவலை தடுக்க நாடுமுழுவதும் முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு.ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை அறிவித்து ஊரடங்கை அமல்படுத்தலாம்.

மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் கொரோனாவால் பல அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர்’ என்று தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை