உணவு பதப்படுத்தும் துறைக்கு ஊக்கச் சலுகை திட்டம்

தினமலர்  தினமலர்
உணவு பதப்படுத்தும் துறைக்கு ஊக்கச் சலுகை திட்டம்

புதுடில்லி:உணவு பதப்படுத்துதல் துறையில், 10 ஆயிரத்து, 900 கோடி ரூபாய் மதிப்பிலான, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கச் சலுகை திட்டத்துக்கான வழிகாட்டுதல்களை, துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உணவு பதப்படுத்தும் தொழிலுக்கான, உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட, ஊக்கச் சலுகை திட்டம் குறித்த தனிப்பட்ட இணையதளத்தை அறிமுகம் செய்து உள்ளார்.உணவு பதப்படுத்துதல் துறையில், உள்நாட்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில், மத்திய அரசு, 10 ஆயிரத்து, 900 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக, விற்பனை அடிப்படையிலான சலுகைகள் மற்றும் வெளிநாடுகளில் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான மானியங்கள் ஆகியவற்றை பெறுவதற்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு, அமைச்சகம் கேட்டுக் கொண்டுஉள்ளது.மேலும், நிறுவனங்கள் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு, ஜூன், 17ம் தேதி கடைசி என்றும் அறிவித்துள்ளது.அத்துடன், இதற்கான வழிகாட்டுதல்களையும் அறிவித்துள்ளது.

மூலக்கதை