பிரிட்டனில் கால்பதிக்கும் ‘எம்பசிஸ்’

தினமலர்  தினமலர்
பிரிட்டனில் கால்பதிக்கும் ‘எம்பசிஸ்’

பெங்களூரு:பெங்களூருவை சேர்ந்த, தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, ‘எம்பசிஸ்’, பிரிட்டனிலும் அலுவலகம் அமைக்கிறது.

லண்டனுக்கு அருகே அமைய இருக்கும் இதன் புதிய அலுவலகத்தில், வங்கி மற்றும் காப்பீடு சம்பந்தமான, டிஜிட்டல் மாற்றங்கள் குறித்த பணிகள் மேற்கொள்ளப்படும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இதற்காக இந்நிறுவனம், 250 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த புதிய மையத்தின் வாயிலாக அங்கிருக்கும்,1,000 பேர்களுக்கு வேலை கிடைக்கும் என, எம்பசிஸ் தெரிவித்து உள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் நிதின் ராகேஷ் கூறியதாவது:எங்கள் இருப்பை, பிரிட்டன் வரை விரிவுபடுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் எதிர்காலத்தில் வளர்ச்சி, செயல் மேம்பாடு ஆகியவற்றை அடைய இயலும் என கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை