அமெரிக்கா பறக்கும் ‘அண்ணாத்த’.; ரஜினி நெக்ஸ்ட் ப்ளான் என்ன..?

FILMI STREET  FILMI STREET
அமெரிக்கா பறக்கும் ‘அண்ணாத்த’.; ரஜினி நெக்ஸ்ட் ப்ளான் என்ன..?

ரஜினிகாந்த் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’.

இமான் இசையமைத்து வரும் இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கால் பலத்த பாதுகாப்புடன் தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இன்னும் சில தினங்களில் இப்பட சூட்டிங் முடியவுள்ளது.

இதனை முடித்துவிட்டு ரஜினி சென்னை திரும்புவார்.

அதன்பின் சென்னையில் படத்திற்கான டப்பிங் பேசுகிறார்.

படத்தின் பணிகளை முடித்துவிட்டு அடுத்த மாதம் ஜுனில் தன் உடல் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்வார் என கூறப்படுகிறது.

ஜூலை / ஆகஸ்ட் மாதத்தில் தன் அடுத்த படத்தில் ரஜினி நடிப்பார் எனவும் தெரிய வந்துள்ளது.

Actor Rajinikanth to travel USA

மூலக்கதை