மறுத்துவிட்டதா மனிதநேயம்!: ஆந்திராவில் கொரோனா தொற்றால் தனித்துவிடப்பட்ட நோயாளி குடும்பத்தினர் கண் முன்னே துடிதுடித்து பலி..!!

தினகரன்  தினகரன்
மறுத்துவிட்டதா மனிதநேயம்!: ஆந்திராவில் கொரோனா தொற்றால் தனித்துவிடப்பட்ட நோயாளி குடும்பத்தினர் கண் முன்னே துடிதுடித்து பலி..!!

ஸ்ரீகாகுளம்: கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஊரின் ஒதுக்குப்புறத்தில் தனித்துவிடப்பட்ட தொழிலாளி குடும்பத்தினர் கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஜிசிகிதம் மடலம் கோயனப்பெட்டா கிராமத்தை சேர்ந்தவர் ஆசிரி நாயுடு. விஜயவாடாவில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்த ஆசிரி நாயுடுவுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் கொரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆசிரி நாயுடு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றார். ஆனால் ஊரில் இருந்து வெகுதொலைவில் உள்ள ஒரு குடிசையில் தங்குமாறு உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர். உரிய சிகிச்சை இல்லாமல் ஆசிரி நாயுடு உடல்நிலை கவலைக்கிடமானது. குடிசை வெளியிலேயே மூச்சு விடமுடியாமல் அவர் திணறி துடித்து கொண்டிருந்தார். தந்தையின் துடிப்பை பார்க்க முடியாத மகள் தண்ணீரை தந்தையின் வாயிலேயே ஊற்றிய சில நிமிடங்களிலேயே ஆசிரி நாயுடு மனைவி, குழந்தைகள் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

மூலக்கதை