நாட்டுக்குள் அனுமதிக்காத பிரதமரை விமர்சித்த வீரர்

தினகரன்  தினகரன்
நாட்டுக்குள் அனுமதிக்காத பிரதமரை விமர்சித்த வீரர்

மும்பை: இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ளது. அதனால் இங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல அந்நாடு தடை விதித்துள்ளது. அதற்கு அந்நாட்டு குடிமக்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் விலக்கு அளிக்கவில்லை. அப்படி சென்றவர்கள் திரும்பி அனுப்பப்பட்டு உள்ளனர். ‘மீறுபவர்களுக்கு 5ஆண்டு சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும்‘ என்றும் அந்நாட்டு பிரதமர் ஸகாட் மோரிசன் எச்சரித்துள்ளார். ஆஸி அரசின் செயலை கடுமையாக சாடியுள்ளார் ஆஸி. அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான மைக்கேல் ஸ்லேட்டர். இப்போது ஐபிஎல் வர்ணனை பணிக்காக இந்தியாவில் தங்கியுள்ளார். அவர் தனது சமூக ஊடக பதிவு ஒன்றில், ‘ஆஸ்திரேலியர்களின் நலனில் அக்கறை இருந்தால் எங்களை நாட்டுக்குள் செல்ல அனுமதிப்பார்கள். எங்களை தடுப்பது ஒரு அவமானம். பிரதமரே உங்கள் கைகளில் ரத்தம் படிந்துள்ளது. எங்களை ஏன் இப்படி நடத்துகிறீர்கள். ஐபிஎல் தொடரில் பணியாற்ற எனக்கு அரசாங்க அனுமதி தந்தது. இப்போது அரசாங்க புறக்கணிப்பு செய்கிறது’ என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஒரு விளையாட்டு வீரர் வெளிப்படையாக, தங்கள் நாட்டு பிரதமரை விமர்சனம் செய்துள்ளது, இந்தியாவில் ஆச்சர்ய அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா உதவி: ஆஸ்திரலேியா  நாட்டின் கிரிக்கெட் சங்கமான ‘கிரிக்கெட் ஆஸ்திரேலியா(சிஏ)’  இப்போது   கொரோனா சீரழிவில் சிக்கியிருக்கும் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது. முதல் கட்டமாக 50,000 ஆஸ்திரேலிய டாலர்களை (28.57லட்ச ரூபாய்) வழங்க உள்ளது.

மூலக்கதை