அத்திக்கடவு - அவிநாசி திட்டம் வேகம் காட்டுமா புதிய அரசு?

தினமலர்  தினமலர்
அத்திக்கடவு  அவிநாசி திட்டம் வேகம் காட்டுமா புதிய அரசு?

அவிநாசி : அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகளில், அ.தி.மு.க., ஆட்சியின் போது காட்டிய அதே வேகம், தி.மு.க., ஆட்சியிலும் தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின், 60 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு -- அவிநாசி திட்டப் பணிகள், கடந்தாண்டு பிப்ரவரியில் துவங்கியது. இதற்கென மாநில அரசு, 1,652 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது; இப்பணிகள் மும்முரமாக நடக்கின்றன. திட்டம் நிறைவேறினால், மூன்று மாவட்டங்களில் உள்ள, 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன் பெறும்; நீராதாரம் உயரும்.


அத்திக்கடவு -- அவிநாசி திட்ட போராட்டக் குழுவினர் கூறுகையில், 'இத்திட்டத்துக்கு முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருந்தார். அடிக்கடி அதிகாரிகளிடம், பணியின் நிலை குறித்து கேட்டறிந்தார்.'தற்போது வரை, 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அத்திக்கடவு திட்ட பணியை, இதே வேகத்துடன் மேற்கொள்ள, தி.மு.க., அரசு, உத்வேகம் காட்ட வேண்டும்' என்றனர்.

மூலக்கதை