பார்லி.,யில் நம்பிக்கை ஓட்டு நேபாள பிரதமர் ஒலி முடிவு

தினமலர்  தினமலர்
பார்லி.,யில் நம்பிக்கை ஓட்டு நேபாள பிரதமர் ஒலி முடிவு

காத்மாண்டு:நம் அண்டை நாடான நேபாளத்தின் பிரதமர், கே.பி.சர்மா ஒலி, வரும், 10ம் தேதி பார்லி.,யில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த முன்வந்துள்ளார்.

கடும் அரசியல் குழப்பங்கள், நெருக்கடி நிலவி வரும் நேபாளத்தில், ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பலத்த போட்டி உள்ளது. பிரதமர் சர்மா ஒலி மற்றும் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தமால் பிரசந்தா இடையே கடந்தாண்டு மோதல் ஏற்பட்டது.இந்நிலையில், பார்லி.,யை கலைக்கும்படி, சர்மா ஒலி, கடந்தாண்டு டிசம்பரில் பரிந்துரைத்தார். அதை, அந்த நாட்டின் அதிபர் பித்யா தேவி பண்டாரி ஏற்றார்.

இந்த நடவடிக்கைக்கு நேபாள உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.இதற்கிடையே, அரசியல் குழப்பம் அதிகரித்து வரும் நிலையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவதற்கு சர்மா ஒலி, தற்போது முன்வந்துள்ளார்.வரும், 10ம் தேதி பார்லி.,யை கூட்டி, நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்துவதற்கு, அதிபர் பித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை