புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் கீழ் 2022க்குள் பிரதமருக்கான இல்லம் கட்டி முடிக்கப்படும்: மத்திய அரசு தகவல்

தினகரன்  தினகரன்
புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் கீழ் 2022க்குள் பிரதமருக்கான இல்லம் கட்டி முடிக்கப்படும்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ள பிரதமருக்கான புதிய இல்லம் 2022ம் ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தின் கீழ் ரூ.20,000 கோடி மதிப்பில், புதிய நாடாளுமன்றம், மத்திய அரசின் தலைமைச் செயலகம் கட்டுவதற்கான பணிகளை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.13,450 கோடி மதிப்பில் பிரதமர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோருக்கு, 2022ம் ஆண்டு 75வது சுதந்திர தினத்திற்குள் புதிய இல்லம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை கைவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தற்போது டெல்லியில் கொரோனா மிக தீவிரமாக பரவி வரும் சூழலிலும், இப்பணிகளை தொடர சுற்றுச் சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், மத்திய பொதுப்பணித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர், குடியரசுத்தலைவர் இல்லம் கட்டும் பணி அடுத்தாண்டு இறுதிக்குள் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை