ஊரடங்கு கட்டுப்பாடுகளால் எரிபொருள் தேவை 7 சதவீதம் சரிவு

தினகரன்  தினகரன்
ஊரடங்கு கட்டுப்பாடுகளால் எரிபொருள் தேவை 7 சதவீதம் சரிவு

புதுடெல்லி: கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரலில் பெட்ரோல் விற்பனையானது 6.3 சதவீதம் குறைந்துள்ளது. கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் எதிரொலியாக நாட்டில் எரிபொருள் தேவை சரிந்துள்ளது. கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் எரிபொருள் தேவையானது 7 சதவீதம் சரிந்துள்ளது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் மற்றும் சுத்திகரிப்பு நிலைய இயக்குனர் அருண் சிங் கூறுகையில்,”  ஏப்ரல் மாத இறுதியில் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையானது கொரோனாவுக்கு முந்தைய கால கட்டத்தை காட்டிலும் 7 சதவீதம் குறைந்துள்ளது” என்றார். கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோல் விற்பனையானது ஏப்ரல் மாதத்தில் 2.14 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மிக குறைவாகும். மார்ச் மாதத்தோடு ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல் விற்பனை 6.3 சதவீதம் குறைந்துள்ளது. 2019 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.1 சதவீதம் குறைவாகும். 2020ம் ஆண்டில் பெட்ரோல் விற்பனை 872000.

மூலக்கதை