கேரளாவில் இன்று முதல் மினி ஊரடங்கு அமல்: அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி

தினகரன்  தினகரன்
கேரளாவில் இன்று முதல் மினி ஊரடங்கு அமல்: அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது. கடந்த சில தினங்களாக 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொது மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (4ம் தேதி) முதல் 9ம் தேதி வரை 6 நாட்களுக்கு கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த 6 நாட்களிலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல முடியும். மக்கள் தேவையில்லாமல் வேளியே செல்ல முடியாது. பால், காய்கறி, பலசரக்கு, மீன், இறைச்சி கடைகள் மட்டுமே திறக்க அனுமதி உண்டு. ஆஸ்பத்திரிகளில், பத்திரிகை நிறுவனங்கள், தொலை பேசி  நிறுவனங்கள் ஐடி, குடிநீர் வினியோகம், மின்சாரம் ஆகியவை தொடர்பான அலுவலகங்கள் செயல்படலாம். ஓட்டல்களில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும். நகை, துணிக்கடைகைள் சலூன்கடைகளுக்கு அனுமதியில்லை. தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்கள் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். பஸ், ரயில், விமானம் உள்பட பொது போக்குவரத்துக்கு அனுமதி உண்டு. சரக்கு போக்குவரத்தும் அனுமதிக்கப்படும். விமானம், ரயில், பஸ் நிலையங்களுக்கு செல்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அத்தியாவசிய கடைகளை மட்டுமே திறக்க முடியும். வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும். தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள தலைமைச் செயலாளர் ஜாய் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை