இம்மாதம் நடைபெற உள்ள எழுத்து தேர்வுகள் ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
இம்மாதம் நடைபெற உள்ள எழுத்து தேர்வுகள் ஒத்திவைப்பு

புதுடெல்லி: கொரோனா 2ம் அலை எதிரொலியாக, மே மாதம் நடைபெறவிருக்கும் அனைத்து எழுத்து தேர்வுகளையும் ஒத்திவைக்குமாறு கல்வித்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசு நிதியுதவி பெறும் அனைத்து கல்வி நிறுவனங்களின் தலைவர்களுக்கும், மத்திய அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் அமித் காரே எழுதிய கடிதத்தில், இந்தாண்டு மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த ஆன்லைன் தேர்வுகள் தவிர, மற்ற அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைக்கும்படி வலியுறுத்தி உள்ளார். மேலும், தேர்வு நடத்துவது குறித்து ஜூன் முதல் வாரம் மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் தேவைப்படுவோருக்கான உதவி உடனடியாக கிடைப்பதை கல்வி நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை