ஐபிஎல் தொடரில் இன்று ஐதராபாத்-மும்பை மோதல்

தினகரன்  தினகரன்
ஐபிஎல் தொடரில் இன்று ஐதராபாத்மும்பை மோதல்

டெல்லி: ஐபிஎல் தொடரில் இன்று டெல்லியில் நடைபெறும் 31வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. நடப்புத் தொடரில் ஐதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி ஒரு போட்டியில் மட்டும் வென்று, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. மும்பையும் இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. அவற்றில் 4ஆட்டங்களில் வென்று பட்டியலில் 4வது இடத்தில் நிற்கிறது. ஐதராபாத் அணியில் திறமையான வீரர்கள் இருந்தும் இன்னும் தொடர் வெற்றி வசப்படவில்லை. புதிதாக கேப்டனாகியுள்ள கேன் வில்லியம்சன் அதனை செய்து முடிப்பார் என்று எதிர்பார்ப்பு உள்ளது. அதே நேரத்தில் ரோகித் தலைமையிலான மும்பை அணி அவ்வப்போது தட்டுதடுமாறினாலும் யாராவது ஒருவர் பொளந்துக்கட்டி அணியை கரை சேர்த்து விடுகின்றனர். அதை சமாளித்தால் ஐதராபாத் இன்று வெற்றியை வசப்படுத்த முடியும். கூடவே வெல்லும் அணி பிளே ஆப் வாய்ப்பையும் தக்க வைத்துக் கொள்ளும்.* இதுவரை மோதியதில்...ஐபிஎல் தொடர்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் 17முறை நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. அவற்றில் மும்பை 9 ஆட்டங்களிலும், ஐதராபாத் 8 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் 4-1 என்ற கணக்கில் வென்று மும்பை முன்னிலையில் உள்ளது. இந்த இரு அணிகளும் சந்தித்த ஆட்டங்களில் அதிகபட்சமாக மும்பை 208, ஐதராபாத் 178ரன்னும் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக ஐதராபாத் 96, மும்பை 87ரன்னும் எடுத்துள்ளன.* இந்தமுறை மோதியதில்...நடப்புத் தொடரில் ஏப்.17ம் தேதி நடந்த 9வது லீக் ஆட்டத்தில் ஏற்கனவே மும்பை-ஐதராபாத் அணிகள் மோதியுள்ளன. முதலில் விளையாடிய மும்பை 20ஓவர் முடிவில் 5விக்கெட் இழப்புக்கு 150ரன் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ஐதராபாத் 19.4ஓவரில் எல்லா விக்கெட்களையும் இழந்து 137ரன் மட்டுமே எடுத்தது. அதனால் மும்பை 13ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

மூலக்கதை