ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி மூன்று மடங்கு அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி மூன்று மடங்கு அதிகரிப்பு

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஏப்ரல் மாதத்தில், மூன்று மடங்கு அதிகரித்து, 2.24 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்றுள்ளது. இதற்கு பொறியியல் பொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், பெட்ரோலிய பொருட்கள் ஆகிய துறைகளில், அதிகளவு ஏற்றுமதி நடைபெற்றது காரணமாக அமைந்துள்ளது.

இது குறித்து, வர்த்தக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஆண்டு ஏப்ரலில்,75 ஆயிரத்து, 258 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி ஆகியிருந்த நிலையில், நடப்பு ஆண்டு ஏப்ரலில், 2.24 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த ஏப்ரலில், 51 ஆயிரத்து, 208 கோடி ரூபாயாக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் இறக்குமதியும் அதிகரித்துஉள்ளது. இறக்குமதியும் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளது. ஏப்ரலில் இறக்குமதி, 3.36 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு ஏப்ரலில் இறக்குமதி, 1.26 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே நடைபெற்றிருந்தது. இவ்வாறு வர்த்தக அமைச்சகம் அறிவித்து உள்ளது.

மூலக்கதை