வலுவான நடவடிக்கை தேவை அரசுக்கு சி.ஐ.ஐ., கோரிக்கை

தினமலர்  தினமலர்
வலுவான நடவடிக்கை தேவை அரசுக்கு சி.ஐ.ஐ., கோரிக்கை

புதுடில்லி, மே 4–

பெருந்தொற்றை கட்டுப்படுத்த வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய தொழிலக கூட்டமைப்பான, சி.ஐ.ஐ., அரசை வலியுறுத்தி உள்ளது. இது குறித்து, கூட்டமைப்பின் தலைவர் உதய் கோட்டக் கூறியிருப்பதாவது:இந்த இக்கட்டான சூழலில், மத்திய அரசு வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொருளாதார செயல்பாடுகளை குறைப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என, சி.ஐ.ஐ., விரும்புகிறது.தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பது, எல்லாவற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.எனவே, மத்திய – மாநில அரசுகள், பொருளாதார செயல்பாடுகளுக்கு தடை விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மருத்துவ உள்கட்டமைப்புகள், வினியோக கட்டமைப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கு, அவசரகால அடிப்படையில் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால், இதற்கு சற்று காலம் ஆகும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை