‘கெம்பிளாஸ்ட் சன்மார்’ நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வருகிறது

தினமலர்  தினமலர்
‘கெம்பிளாஸ்ட் சன்மார்’ நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வருகிறது

புதுடில்லி:சென்னையைச் சேர்ந்த, ‘கெம்பிளாஸ்ட் சன்மார்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.

இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதன் மூலம், 3,500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.இந்த பங்கு வெளியீட்டின் போது, 1,500 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், பங்குதாரர்கள் வசம் இருக்கும், 2,000கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும் விற்பனை செய்ய இருக்கிறது.

சிறப்பு வகை ரசாயன தயாரிப்பு நிறுவனமான கெம்பிளாஸ்ட் சன்மார், பாலிவினைல் குளோரைடு, மருந்து மற்றும் விவசாயம் சம்பந்தமான ரசாயனங்கள் ஆகிய தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறது.திரட்டப்படும் நிதியை கொண்டு, முன்னர் வழங்கப்பட்ட பங்குகளாக மாறாத பத்திரங்களை மீட்பது மற்றும் பொதுவான நிர்வாக செலவு ஆகியவற்றுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதற்கு முன் மும்பை, தேசிய, மெட்ராஸ் பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருந்த இந்நிறுவனம், 2012ம் ஆண்டில் பட்டியலில் இருந்து நீங்கியது.

மூலக்கதை